1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!

காஷ்மீரில் கடும் மோதல் 3 தீவிரவாதிகள் பலி
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யினரு‌ட‌ன் நட‌ந்த மோத‌லி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் மூ‌ன்று பே‌‌ர் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

எ‌ல்லையோர மாவ‌ட்டமான கு‌ப்வாரா‌வி‌ல் க‌ர்னா எ‌ன்ற இட‌த்‌தி‌ல் பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல் இரு‌ந்து ஊடுரு‌விய ‌தீ‌விரவா‌திக‌ளு‌க்கு‌ம் நமது பாதுகா‌ப்பு‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல், ‌தீ‌விரவா‌திக‌ள் மூ‌ன்று பே‌ர் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக‌க் காவ‌ல்துறை‌ப் பே‌ச்சாள‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌திக‌ளிட‌ம் இரு‌ந்து ஏ.கே.47 து‌ப்பா‌க்‌கிக‌ள் 3, கை‌த்து‌ப்பா‌க்‌கி 1, ஏ.கே. து‌ப்பா‌க்‌கி‌ கு‌ண்டுக‌ள் 293 சு‌ற்று, கை‌த்து‌ப்பா‌க்‌கி கு‌ண்டு 45 சு‌ற்று, ‌ஜி‌பி.எ‌ஸ். கரு‌வி, ‌திசை கா‌ட்டு‌ம் கரு‌வி, பு‌த்தக‌ங்க‌ள் உ‌ள்‌ளி‌ட்டவை கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன.