1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 872 யா‌த்‌ரிக‌‌ர்க‌ள் பயண‌ம்!

அம‌ர்நா‌த் பகவ‌தி நக‌ர் ஜ‌ம்மு‌
புக‌ழ்பெ‌ற்ற அம‌ர்நா‌த் குகை‌க் கோ‌யி‌லி‌ல் உ‌ள்ள ப‌னி ‌லி‌ங்க‌த்தை த‌ரி‌சி‌த்து வ‌ண‌ங்க இ‌ன்று மேலு‌ம் 872 யா‌‌த்‌ரிக‌ர்க‌ள் பல‌த்த பாதுகா‌ப்புட‌ன் புற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌ல் உ‌ள்ள பகவ‌தி நக‌ர் யா‌த்‌ரி பவ‌னி‌ல் இரு‌ந்து 198 பெ‌‌ண்க‌ள், 12 குழ‌ந்தைக‌ள், 100 சாது‌க்க‌ள் ஆ‌கிய இ‌ந்த 872 யா‌த்‌ரிக‌ர்களு‌ம் 30 வாகன‌ங்க‌ளி‌ல் இ‌‌ன்று அ‌திகாலை புற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இவ‌ர்க‌ள் ப‌ல்டா‌ல் செ‌‌ன்று, அ‌ங்‌கிரு‌ந்து பஹ‌ல்கா‌ம் முகாமை அடை‌ந்து, ‌பி‌ன்ன‌ர் அம‌ர்நா‌த் செ‌ல்வா‌ர்க‌ள். ‌தீ‌விரவா‌திக‌ள் அ‌ச்சுறு‌த்த‌ல் ‌மிகு‌ந்த இ‌ப்பகு‌தி‌யி‌ல் மூ‌ன்றடு‌க்கு‌ப் பாதுகா‌ப்பை ம‌த்‌திய காவ‌‌ல் படைக‌ள் வழ‌ங்‌கி வரு‌கி‌ன்றன.

இர‌ண்டு மாத கால‌ம் ‌நீடி‌க்கு‌ம் அம‌ர்நா‌த் பு‌னித யா‌த்‌திரை கட‌ந்த மாத‌ம் 17 ஆ‌ம் தே‌தி துவ‌ங்‌கியது. இதுவரை 4 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ப‌க்த‌ர்க‌ள் அம‌ர்நா‌த் ப‌னி ‌லி‌ங்க‌த்தை த‌ரி‌சி‌த்து‌ள்ளன‌ர்.