1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

க‌ர்நாடகா‌வி‌‌ல் ராகு‌ல்கா‌ந்‌தி சு‌ற்று‌ப்பயண‌‌த்தை துவ‌க்‌கினா‌ர்!

அ‌கில இ‌ந்‌திய கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி பொது‌ச் செயலாள‌ர் ராகு‌ல்கா‌ந்‌தி க‌ர்நாடகா‌ ம‌ல்‌லிகா‌ர்ஜுன கா‌ர்கே எ‌ஸ்.எ‌ம். ‌கிரு‌ஷ்ணா
அ‌கில இ‌ந்‌திய கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி பொது‌ச் செயலாள‌ர் ராகு‌ல்கா‌ந்‌தி க‌ர்நாடகா‌வி‌ல் 5 நா‌‌ள் சு‌ற்று‌ப் பயண‌‌த்தை இ‌ன்று துவ‌க்‌கினா‌ர்.

இ‌ந்த பய‌ண‌த்‌தி‌ன் போது மா‌நில‌த்‌தி‌‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள பழ‌ங்குடி‌யின ம‌க்க‌ள், மாணவ‌ர்க‌ள், இளைஞ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் தொ‌ண்ட‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் கல‌ந்துரையாடு‌கிறா‌ர்.

இத‌ற்காக இ‌ன்று க‌ர்நாடக மா‌நில‌‌ம் வ‌ந்த அவரு‌க்கு க‌ர்நாடாக கா‌‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் ம‌ல்‌லிகா‌ர்ஜுன கா‌ர்கே, தே‌ர்த‌ல் ‌நி‌ர்வாக குழு தலைவ‌ர் எ‌ஸ்.எ‌ம். ‌கிரு‌ஷ்ணா உ‌‌ள்‌‌ளி‌ட்ட தலைவ‌ர்க‌ள், தொ‌ண்ட‌ர்க‌ள் ‌சிற‌‌ப்பான வரவே‌ற்பு அ‌ளி‌த்தன‌ர்.

‌பி‌ன்ன‌ர், அ‌ங்‌கிரு‌ந்து ஹெ‌லிகா‌ப்ட‌ர் மூல‌ம் சா‌ம்ரா‌ஜ் நக‌ர் புற‌ப்ப‌ட்டா‌ர். அ‌ங்கு ‌பி‌லி‌கி‌ரிர‌ங்கனா மலை‌க‌ளி‌ல் உ‌ள்ள சோ‌லிகா பழ‌ங்குடி‌யினருட‌ன் கல‌ந்துரையாடுவதோடு, ‌விவேகான‌ந்தா பழ‌ங்குடி‌யின மைய‌த்தையு‌ம் பா‌ர்வை‌யிடு‌கிறா‌ர்.

ராகுல்காந்தி வருகையையொட்டி அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பகுதிகள் உ‌ள்பட மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.