ஆப்கானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் மீட்பு!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட இந்தியர் உள்பட 2 பேரை ராணுவத்தினர் அதிரடியாக மீட்டனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேராட் மாகாணத்திலிருந்து கடந்த மாதம் இந்தியரான முகமது நயீம் என்பவர் தலிபான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.
துபாய் நிறுவனம் ஒன்றிற்காக ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த நயீம் கடந்த மாதம் 22ஆம் தேதி டாக்சியில் சென்று கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டார். நேபாளத்தை சேர்ந்த ஒருவரையும் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
இந்த நிலையில் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு ஆப்கான் ராணுவத்தினர் அந்த இடத்தில் அதிரடியாக புகுந்து அவர்களை மீட்டனர்.
இந்த நிகழ்வில் தீவிரவாதி தலைவன் உள்பட 15 பேரை ராணுவத்தினர் கைது செய்தனர். இவரும் பத்திரமாக இருப்பதாக ஆப்கான் ராணுவம் தெரிவித்துள்ளது.