1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ரஷ்ய அதிபராக மெட்வடேவ் பதவியேற்பு!

ரஷ்யா டிமிட்ரி மெட்வெடேவ் புடின்
ரஷ்யாவின் புதிய அதிபராக இன்று டிமிட்ரி மெட்வெடேவ் இன்று பதவியேற்றார்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சமூக உரிமைகளுக்கும் பாடுபடுவேன் என்று அவர் தனது உறுதிமொழியில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விளாடிமிர் புடினின் 8 ஆண்டுகால அதிபர் பதவி முடிவுக்கு வருகிறது. இருப்பினும் நாட்டின் பிரதமராக புடின் நியமிக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னுடைய பதவியேற்பு உரையில் மெட்வெடேவ், சமூக மற்றும் பொருளாதார சுதந்திரத்தை வலுப்படுத்துவதே தனது பிரதான நோக்கம் என்று தெரிவித்தார்.