1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌சி‌றில‌ங்க ‌விமான கு‌ண்டு‌வீ‌ச்‌சி‌ல் 8 பே‌ர் ப‌லி!

‌சி‌றில‌ங்க ‌விமான கு‌ண்டு‌வீ‌ச்‌சி‌ல் 8 பே‌ர் ப‌லி!
இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை நட‌த்‌திய கு‌ண்டு‌வீ‌ச்சு‌த் தா‌க்குத‌லி‌ல் 4 ‌சிறுவ‌ர்க‌ள் உ‌ள்பட பொதும‌க்க‌ள் 5 பே‌ர் ப‌லியானதுட‌ன் 9 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

‌கி‌ளிநொ‌ச்‌சி மாவ‌ட்ட‌ம் பூநக‌ரி‌, கிராஞ்சி சிவபுரம் பகு‌தி‌யி‌ல் இ‌ன்று காலை 8.15 ம‌ணி‌க்கு ‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை கு‌ண்டு‌‌வீ‌ச்சு‌த் தா‌க்குத‌‌ல் நட‌த்‌தியதாக‌ப் பு‌தின‌ம் இணைய தள‌ச் செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இதில் 4 சிறுவ‌ர்க‌ள் உள்ளிட்ட 8 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுட‌ன், 9 பேர் படுகாயமடைந்துள்ளன‌ர். அ‌தி‌ல் இருவ‌ர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் ‌விவர‌ம், 1. கதிர்வேலு திருநீலகண்டன் (வயது 79), 2. கிராஞ்சியைச் சேர்ந்த ஆசிரியரான சிவாநந்தி (வயது 27), 3. விஜயகுமார் விதுயா (வயது 09), 4. இந்திரன் லதா, 5. தமிழரசன் சுமதி (வயது 30), 6. சசிகரன் கவிதநாயகி (வயது 34), 7. சசிகரன் காதீபன் (வயது 04), 8. சசிகரன் தமிழ்வேந்தன் (வயது 06) எனவு‌ம், இ‌தி‌ல் கடை‌சி மூவ‌ர் ஒரே குடு‌ம்ப‌த்தை‌ச் சே‌‌ர்‌ந்தவ‌ர்க‌ள் எனவு‌ம் அ‌ச்செ‌ய்‌தி கூறு‌கிறது.

காயமடைந்த மக்கள் முழங்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , ‌பி‌ன்ன‌ர் மே‌ல்‌சி‌கி‌ச்சை‌க்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.