1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 21 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

இல‌ங்கை ம‌ன்னா‌‌ர் ‌விடுதலை‌ப் பு‌லி ‌சி‌றில‌ங்க ராணுவ‌‌ம் பாலைக்குழி
இல‌ங்கை, ம‌ன்னா‌ரி‌ல் ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடுமையான மோத‌லி‌ல் ராணுவ‌த்‌தின‌ர் 21 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 20 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

பாலைக்குழியில் இருந்து அடம்பன் நோக்கி சிறிலங்கா ராணுவ‌த்‌தின‌ர் மேற்கொண்ட முன்நகர்வை விடுதலைப் புலிகள் முறியடித்ததாகவு‌ம், இதில் ராணுவ‌த்‌தின‌ர் 10 பே‌ர் கொல்லப்பட்டதுடன் 20-க்கும் மே‌ற்ப‌ட்டோ‌ர் காயமடைந்துள்ளதாகவு‌ம் பு‌தின‌ம் இணையதள‌ச் செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

மன்னார் அடம்பன் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் ராணுவ‌த்‌தின‌ர் 11 பே‌ர் கொல்லப்பட்டுள்ளதாகவு‌ம் அ‌ச்செ‌ய்‌தி மேலு‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

கட‌ந்த 2 நா‌ட்க‌ளி‌ல் நட‌ந்து‌ள்ள இ‌த்தா‌க்குத‌ல்க‌ளி‌ல் ‌பி‌ன்வா‌ங்‌கிய ராணுவ‌த்‌தின‌ரிட‌ம் இரு‌ந்து பெருமள‌விலான வெடி பொரு‌ட்களையு‌ம் பு‌லிக‌ள் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர்.