1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ஆ‌ப்க‌னி‌ல் த‌ற்கொலை‌ப் படை‌த் தா‌க்குத‌ல்: 6 ராணுவ‌ம் ப‌லி!

ஆப்கானிஸ்தான் காபூலில் தற்கொலைப்படை தாக்குதலில் 6 ராணுவ‌த்‌தின‌ர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநக‌ர் காபூலில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேரு‌ந்‌தி‌ன் மீது தற்கொலைப்படை பய‌ங்கரவா‌தி நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ‌த்‌தின‌ர் 6 பே‌ர் கொல்லப்பட்டனர்.

டயோட்டா காரில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி மினி பேரு‌ந்‌தி‌ன் மீது மோதியவுடன், அது வெடித்து சிதறியதாக ஆப்கானிஸ்தான் ராணுவ உயரதிகாரி அஜீஸ் அகமத் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அமீர் முகமது என்பவர் தெரிவித்துள்ளார். கடந்த 8 தினங்களில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள மூன்றாவது தற்கொலைப்படை தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.