இந்திய, பாகிஸ்தான் சிறைகளில் உள்ள மீனவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 14, 15ஆம் தேதிகளுக்கு முன்னர் விடுதலை செய்வதென இரு நாடுகளின் உள்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஒரு அங்கமாக பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை ஒன்றிணைந்து செயலாற்றி முறியடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இந்திய உள்துறைச் செயலர் மதுகர் குப்தா, பாகிஸ்தான் உள்துறை செயலர் சையத் கமல்...