1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

டாலர் மதிப்பு 5 பைசா உயர்வு!

டாலர் மும்பை அந்நியச் செலவாணி
மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்தது.

வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.49.37 பைசா என்ற அளவில் இருந்தது. இது முந்தைய நாள் மதிப்பை விட, 5 பைசா குறைவு.

நேற்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அந்நிய செலவாணி சந்தை விடுமுறை.

அந்நியச் செலவாணி சந்தையில் இன்றைய வர்த்ககத்தில் அதிக வேறுபாடு இருந்தது. வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் ரூ. 49.12 முதல் ரூ.49.42 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து குறியீட்டு எண்கள் அதிக ஏற்ற இறக்குத்துடன் உள்ளன. இதன் பாதிப்பு அந்நியச் செலவாணி சந்தையிலும் எதிரொலித்தது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
About Writer
Webdunia