1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

டாலர் மதிப்பு 3 பைசா உயர்வு

டாலர் மதிப்பு 3 பைசா உயர்வு
இன்று காலை 1 டாலரின் மதிப்பு ரூ.43.73/74 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 3 பைசா அதிகம். நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 43.70.

கச்சா விலை உயர்ந்ததால் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்கின. இதே போல் இறக்குமதியாளர்களும் டாலரை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் டாலர் மதிப்பு அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. கடந்த பத்து நாட்களின் மட்டும் ரூபாயின் மதிப்பு 150 பைசா குறைந்துள்ளது.

நேற்று ரூபாயின் மதிப்பு அதிக அளவு குறையாமல் இருக்க, ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கி, அந்நியச் செலவாணி சந்தையில் டாலரை விற்பனை செய்தது.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ. 43.63 முதல் 43.78 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது.
About Writer
Webdunia