பருவநிலை மாற்றத்தால் பல நாடுகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. பெட்ரோல், டீசல், நிலக்கரி உட்பட பல்வேறு பொருட்களை எரிப்பது, ரசாயன வாயுக்கள் வெளியேற்றம் ஆகியவைகளால் பூமியின் மேற்பகுதி அதிக வெப்பமடைகின்றது. இதனால் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது. பூமிக்கு பாதுகாப்பாக இருக்கும் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால், பருவநிலை மாறுகின்றது. அண்டார்டிகா, இமயமலை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதால் பூமி வெப்பமடைவதுடன்,...