ஹரியானா மாநிலத்தில் ஒப்பந்த முறை விவசாயம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் விளை பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை கிடைக்க வேண்டும் என்று சாதி லால் பத்ரா கூறினார். ஹரியானா மாநிலம் பஞ்சுக்லா நகரில் ஒப்பந்த முறை விவசாயம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விவசாயிகளும், உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கை ஹரியானா மாநில விவசாய விளை பொருட்கள் வாணிப கழகத்தின் தலைவர் சாதி...