இந்த வருடம் கரிப் பருவத்தில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்ததால், சோயா பயிரிடப்படும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதே போல் நிலக்கடலை அதிகளவு பயிரிடப்படும் குஜராத் மற்றும் தென் மாநிலங்களிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. எண்ணெய் வித்து உற்பத்தி சென்ற வருடத்தைவிட 25 விழுக்காடு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாக்பூரில் இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள்...