வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

மகிஷாசுரனை போரிட்டு வாகை சூடிய நாளே விஜயதசமி!!

பராசக்தி மூன்று சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை போரிட்டு வாகை சூடிய நாள் தான் விஜயதசமி. அன்னை பராசக்தி ஒன்பது ராத்திரிகளுக்கு போரிட்ட நாட்களை ‘நவராத்திரி நாட்கள்’ என்றும், வெற்றியை கொண்டாடப்படும் நாள் தான் விஜயதசமி. விஜய் என்றால்  வெற்றி என்பதாகும், தசமி என்றால் பத்து  ஆகும்.
பத்தாம் நாள் மகிஷனை அழித்ததால் மகிஷாசூரமர்தியானாள் எனக் கூறப்படுகின்றது. பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின் பொழுது வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து பூஜை செய்ததும் விஜயதசமி நாள் அன்று தான். 
 
விநாயக புராணத்தின் படி வன்னி மரத்தை நினைத்தாலோ, பூஜை செய்தாலோ நாம் செய்த பாவங்கள் எல்லாம் அகலும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. ஆகவே விஜயதசமி நாளில் வன்னி மரத்துடன் இருக்கும் பிள்ளையாரை வணங்கி வந்தால் நினைத்த காரியம் கைக்கூடும்.
 
அம்மனை ஸ்ரீ வித்யா என்று கூறி ஆராதனை செய்ய வேண்டும். ஒன்பது நாள் ஆராதனை முடிந்து பத்தாவது நாள் நம் வீட்டை விட்டு வழி அனுப்பும் பொழுது நமக்கு வேண்டிய வரங்களை கொடுப்பாள். அதிகாலையில் பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். மரம் செடி அருகில்  ஆரத்தியை ஊற்றி விட வேண்டும். கொலு வைக்கின்ற பழக்கம் இருப்பவர்கள் நல்ல நேரம் பார்த்து பொம்மையை நகர்த்தவும்.