ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்களின் சிறப்புக்கள்!!

நவராத்திரி விழாவில் முப்பெரும் தேவியரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடையில் மூன்று  நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த  நவராத்திரி விழா உள்ளது.
 
ன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை, லவண  துர்க்கை ஆகியோர் நவ துர்க்கை என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் துர்க்கையின் அம்சங்கள்.
 
நவராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுபடுத்தி தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள். நவராத்திரி முதல் ராத்திரியின் போது துர்க்கையை அலங்கரித்து வழிப்பட்டால் சர்வமங்கள் ரூபிணியாக இருக்கிறாள்.
 
இரண்டாவது நாள் ஆபரணங்களை அவளுக்கு அணிவித்தால் சர்வபூர்ண பூஜிதமாக அருள் பாலிப்பாள். மூன்றாவது ராத்திரியின்போது முதலில் செய்த பூஜைகளுக்கு மகிழ்ந்து ஞானத்தை நமக்கு அளிக்கிறாள்.
 
துர்க்கையே முதல் மகளாக இருப்பதால் நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கையே இடம் பெர்று நம் அனைவரின் துயர் துடைக்கிறாள். இதனால் நவராத்திரி முதல் மூன்று நாட்கள் துர்க்கையை நாம் அனைவரும் முதலில் பூஜிக்கிறோம்.