புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (18:12 IST)

அடிக்கடி இந்த பானங்களை குடித்து வந்தால் உடல் எடை குறையுமா...?

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.


அருகம்புல் சாரெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும். கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

மேலும் வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி,எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசினி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

உடலில் இருக்கும் கெட்ட கழிவுகளை நீக்கி, உடல் எடையை கணிசமாக குறைக்கும் ஆற்றல் படைத்தது எனவே இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு மைய இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து பானம் தயாரிக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதில் இடித்து வைத்த இஞ்சி மற்றும் பட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

2 டம்ளர் தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் கொதித்து வரும். அதன் பிறகு அதனை வடிகட்டி ஆறவைத்து, இரவு நேரத்தில் தூங்க செல்லும் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தயாரித்து பருக வேண்டும்.