Daily Horoscope
✕

அல்சர் ஏன் வருகிறது? அதனை குணப்படுத்தும் வழிமுறைகள்...!

Updated: வியாழன், 21 ஜூன் 2018 (12:44 IST)
 
நேரம் தவறி உண்பதாலும், தொடர்ந்து அதிக காரமான உணவுகளை உண்பதாலும் வயிற்றுப்புண் வரக்கூடும். மேலும் வயிற்றில் உள்ள இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல், கணையம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது அழற்சி இருந்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
 
இதுதவிர இரைப்பை அழற்சி, இரைப்பை புண், முன் சிறுகுடல் புண், இரைப்பையும் உணவுக் குழலும் இணையுமிடத்தில் ஏற்படும் புண்களும் வயிற்றில் ஏற்படும் எரிச்சலுக்கான காரணங்களாகும்.
 
புகை பிடித்தல், புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், வாயுக்கோளாறு, அதிகமான பதற்றம், கோபம் போன்றவற்றாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
குணப்படுத்தும் வழிகள்: மாங்கொட்டைப் பருப்பை வெயிலில் காய வைத்து போடி செய்து, காலையும் மாலையும் ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும்.
 
மாதுளை பழத்தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்துகொள்ள வேண்டும். இரவில் உறங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை மாதுளைப் பொடியை எடுத்து  வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் ஆறும்.
 
மிளகைப் போடி செய்து சலித்துக் கொள்ள வேண்டும். இதில் அரை ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இதன் மூலம் அல்சரை குணப் படுத்தலாம்.
 
வயிற்றுப்புண் ஆற பீட்ருட் கிழங்கை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும்.

எல்லாம் காட்டு

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

அடுத்த கட்டுரையில்
Show comments