புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எள்ளை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது ஏன்...?

எள்ளு சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் இருக்கும். அதுமட்டுமின்றி, புற்றுநோய் வந்தவருக்கு இது அருமருந்தாக இருப்பதாகவும், இப்போதைய ஆராய்ச்சியில்  கண்டுபிடித்துள்ளனர்.

பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். மார்பக புற்றுநோய் மட்டுமின்றி, பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய்  போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி, சுத்தமாக வைக்கிறது.
 
நல்லெண்ணெய்யை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிக நல்லது. நல்லெண்ணெய்யில் இருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தை குறைக்க, பெரிதும் உதவுகிறது.  அதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெய் சாப்பிடுவது, நல்ல பலனை தரும். தினமும் காலையில்,  நல்லெண்ணெய்யால் வாயை கொப்பளித்தால், சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.
 
வெள்ளை எள்ளை விட, கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் அதிகம் உள்ளது. எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை  நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். மேலும், முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் தீரும். 
 
முக்கியமாக, செரிமான கோளாறு உள்ளோர், தினமும், அரை தேக்கரண்டி எள் சாப்பிடுவது சிறந்தது. உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. உடலில் ஏதேனும்  நோய் உள்ளோர், மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.