Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடுப்பு வலி ஏன் ஏற்படுகிறது?; அதற்கான தீர்வுகள்....!

Updated: சனி, 9 ஜூன் 2018 (18:31 IST)
 
தற்கால நல்ல நாற்காலிகள் செங்குத்தாக இருப்பதில்லை. முதுகுப் புறமும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள். இருக்கையின் உயரமும் முக்கியமானது.  உட்கார்ந்திருக்கும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படியானதும், முழங்கால்கள் செங்குத்தாக மடிந்திருக்கவும் கூடிய உயரம் உள்ள நாற்காலிகளாக தேர்ந்தெடுத்து உட்காருங்கள்.
 
உட்காரும்போது மட்டுமின்றி ஏனைய நேரங்களிலும் உங்கள் முதுகு, கழுத்து, இடுப்பு போன்ற இடங்களில் உள்ள இயற்கையான உடல் வளைவுகளைச் சரியான  முறையில் பேணுவது அவசியம். நிற்கும் போதும் இது முக்கியமானது. உடலுக்கு அசௌகரியமான நிலைகளில் அதிக நேரம் நிற்க வேண்டாம். அவ்வாறு நிற்க  நேர்ந்தால் அடிக்கடி உடலின் நிலையை மாற்றி நிற்பது அவசியம்.
 
பயிற்சிகள்:
 
உங்கள் உடலுக்கு பயிற்சிகள் கொடுப்பது அவசியம். தினமும் ஏதாவது பயிற்சி செய்யுங்கள். நீந்துவது, நடப்பது, ஓடுவது போன்ற எதுவும் உதவும். இடுப்பு வலி ஏற்படாது தடுப்பதற்கு வயிற்றை தசைகளையும், முதுகுப் புறத் தசைகளையும் வலுவாக வைத்திருக்க வேண்டும். தசைகளை நெகிழ்ச்சித்தன்மை  கொண்டவையும் ஆகும்.
 
படுத்திருந்தபடி உங்கள் ஒரு முழங்காலை மடித்து நெஞ்சு வரை கொண்டு செல்வதாகும். முதலில் ஒரு காலில் செய்யுங்கள். பிறகு மற்றக் காலில் செய்யுங்கள்.  இறுதியாக இரண்டு கால்களையும் சேர்த்துச் செய்யுங்கள். முதுகைப் பிற்புறமாக வளைப்பது மற்றொரு நல்ல பயிற்சியாகும். இவற்றை தவிர உங்கள்  எடையைச் சரியான அளவில் பேணுவது அவசியம்.
 

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments