Daily Horoscope
✕

புதினாவை எந்த முறையில் பயன்படுத்துவதால் அற்புத பலன்களை பெறலாம்...?

Written By Sasikala
Updated: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (09:38 IST)

பசியைத் தூண்டுவதற்கு புதினாகீரை பெரிதும் உதவும். சிறுநீரைப் பெருக்கும், வாயுப் பிரச்னையை நீக்கும். சுவையின்மைப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களும் வாந்தி வரும் உணர்வு இருப்பவர்களும், புதினாவை துவையலாகச் செய்து சாப்பிடலாம்.
 
புதினாவுடன் உலர்ந்த பேரீச்சம்பழம், மிளகு, இந்துப்பு, உலர்ந்த திராட்சை, சீரகம் சம அளவு சேர்த்து, எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதை, உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். காய்ச்சலின் போது ஏற்படும் வாய் கசப்பைப் போக்கும். ருசியை உணரவைக்கும்.
 
புதினாவை நிழலில் காய வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் சமயங்களில், உலர்ந்த புதினா ஒரு கைப்பிடி எடுத்து, ஒன்றரை லிட்டர் நீர் சேர்த்து, கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை, மூன்று, நான்கு மணி நேர இடைவேளையில் 30 - 60 மி.லி குடித்துவந்தால், காய்ச்சல் சரியாகும்.
 
புதினாவுடன் கற்பூர புல்லை சம அளவு சேர்த்துக் காய்ச்சி, குடிநீர் தயார் செய்து அருந்தினால் தலைவலி, வாந்தி, காய்ச்சல் குணமாகும். சிறுநீர் நன்றாகப் பிரியும். நல்ல உறக்கமும் உண்டாகும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியைப் போக்கும்.
 
ஈரில் ரத்தம் வடிதல் பிரச்னை சரியாகவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும், புதினா இலையை, நிழலில் காயவைத்துப் பொடித்து, பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.
 
தலைவலி, மூட்டு வலி, தசைப்பிடிப்பு ஆகியவற்றுக்கு பூசப்படும் களிம்புகளிலும் செரிமானக் கோளாறுகள், இருமல் ஆகியவற்றுக்கான மருந்துகளிலும் புதினா எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments