Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்று பிரச்சனைகளுக்கு எந்த உணவு பொருட்களை தவிர்க்கவேண்டும்...?

Written By Sasikala
Updated: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (18:21 IST)

சிட்ரஸ் பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை தான். ஆனால் அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அதனை அதிக அளவில் சாப்பிட்டால், அவை  இறுதியில் வயிற்றுப் போக்கிற்கு வழிவகுக்கும். 
 
முட்டைகோஸில் சல்பர் மற்றும் கரையாத நார்ச்சத்து இருப்பதால், அவை வாயுத் தொல்லையை உண்டாக்கி, வயிற்றுப் போக்கையும் உண்டாக்கும். ஏனெனில் இவை கரையாத நார்ச்சத்து கொண்டிருப்பதால், அவை நேரடியாக குடலை அடைந்து, வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது.
 
பூண்டிலும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இவையும் வாயுத் தொல்லையை உண்டாக்கி, வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும். ஆகவே வயிற்றுப்  பிரச்சனை உள்ளவர்கள், பூண்டு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
 
பருப்பு வகைகளும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கக்கூடியவை தான். அவை செரிமானப் பிரச்சனையை உண்டாக்குவதோடு, சில நேரங்களில் செரிமானமாகாத உணவுப் பொருட்கள் நேரடியாக பெருங்குடலை அடைந்து, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கிவிடும்.
 
காரமான மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் எளிதில் செரிமானமடையாது. எனவே அவை வாயு தொல்லையை ஏற்படுத்தி, குடலியக்கத்திலும் இடையூறை  ஏற்படுத்திவிடும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments