1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 21 மே 2022 (14:08 IST)

எந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியம் தரும்...?

Healthy Foods
நாம் இந்த வாழ்வை வாழ்வதற்கு மிக முக்கிய காரணம் உணவு தான். உணவு இல்லையென்றால் நமது உடலுக்கு ஆற்றல் கிடைக்காது. அதுவும் சாப்பிட கூடிய உணவு மிக ஆரோக்கியம் கொண்டதாக இருக்கவேண்டும்.


காலை நேரத்தில் நீங்கள் பப்பாளியை உணவில் சேர்த்து கொண்டால் ஏராளமான நன்மைகள் நடக்குமாம். குறிப்பாக முக அழகு கூடுதல், செரிமான பிரச்சினை, அழுக்குகள் வெளியேற்றம் ஆகிய நன்மைகள் உடலுக்கு நடக்கும். அதுவும் இதன் மீது எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் அதிக பயன்கள் கிடைக்கும்.

சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் முகத்தை மிக மென்மையாகவும், பொலிவாகவும், எந்த வித பிரச்சினைகளும் முகத்தில் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளும். அத்துடன் நகங்களையும் உடையாமல் பார்த்து கொள்ளும்.

காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் பல்வேறு நலன்கள் கிடைக்கும். முட்டை நமது ஆரோக்கியத்தை சீராக வைப்பதோடு, உடல் பருமன், முக அழகு போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.

சீஸ் இருந்தாலே புரத சத்து மிகுந்த காலை உணவு ஆகி விடும். 200 கிராம் கப்பில் சுமார் 24 கிராம் புரதம் கிடைக்கின்றது. இதனை உணவு, பழங்கள், இவற்றின் மீது துருவி தூவி எடுத்துக் கொள்ளலாம்.

முழு தானிய கோதுமை ரொட்டி உடன் விதைகள், காய்கறிகள் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். பாதாம், வால்நட், பிஸ்தா, முந்திரி இவை அனைத்துமே சத்து நிறைந்தவை.

தினமும் காலையில் எழுந்ததும் காபி, அல்லது வெறும் டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ குடித்து வந்தாலே உடல் ஆரோக்கியம் மற்றும் முக ஆரோக்கியம் இரு மடங்காக அதிகரிக்கும் . இந்த உணவுகளை காலை வேளையில் சாப்பிட்டு வந்தாலே முக அழகு இரட்டிப்பாக கூடும்.