1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 21 மே 2022 (09:33 IST)

தொட்டா சிணுங்கி இலையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

உடலில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.


குழிப்புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணில் படுமாறு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முழுச்செடியையும் இடித்து சாறு எடுத்து, 4 தேக்கரண்டி சாற்றுடன், தேன் கலந்து மூன்று வேளையும் குடிக்கவேண்டும் அல்லது ஒரு கைப்பிடி அளவு இலைகளுடன் சிறிதளவு சீரகம் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிடவேண்டும்.

சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

தொட்டால் சிணுங்கி இலையை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். வயிற்றுப்புண்ணும் ஆறும்.

கை, கால், மூட்டு வீக்கம், ஒவ்வாமை, தோல் தடிப்புகள் குணமாக, தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர குணமாகும்.