Daily Horoscope

எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்ட கோதுமை !!

Written By Sasikala
Updated: புதன், 21 அக்டோபர் 2020 (17:52 IST)

கோதுமை மாவு இரத்தத்தினை சுத்தம் செய்வதாக உள்ளது. மேலும் கோதுமையில் உள்ள அதிக அளவு நார்ச் சத்து காரணமாக அது உடல் எடையினைக்  குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் கோதுமையில் சப்பாத்தி செய்து சாப்பிட வேண்டும். 
 
கோதுமையானது சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது, மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் சப்பாத்தியாக மட்டுமல்லாமல்,  கோதுமையில் கஞ்சி, கோதுமையில் உப்புமா, கோதுமையில் தோசை என வித்தியாசமாக செய்து சாப்பிடலாம்.
 
கோதுமை தானியத்தில் இருந்து பால் பிழிந்து காய்ச்சிக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். சம்பா கோதுமையைச்  சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும்.
 
வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமையை ரவை போல அரைத்து கஞ்சி செய்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். 
 
கோதுமையில்  புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. கோதுமையில் களி செய்து விருப்பமான குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டாலும், கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments