இளமை அழகை நீட்டிக்கும் பிஸ்தா பருப்பு!
விலை உயர்வானதும், ட்ரை ப்ரூட்ஸில் ஒன்றுமான பிஸ்தா பருப்பு பல வகை ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. கொஞ்சமாக பிஸ்தா பருப்பு சாப்பிட்டாலே அது தரும் நன்மை அதிகம்.
-
பிஸ்தா பருப்பில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், விட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது.
-
பிஸ்தாவில் உள்ள குறைவான கலோரி உடல் எடை குறைக்க உதவுகிறது.
-
பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
-
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பிஸ்தா பருப்பு உதவுகிறது.
-
பிஸ்தாவில் உள்ள விட்டமின்கள் சரும அளகை கூட்டி இளமையை தக்க வைக்கிறது.
-
பிஸ்தாவில் உள்ள லுடீன் உள்ளிட்ட ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
-
பிஸ்தாவில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்டுகள் நமது செல்களை சேதமடையாமல் பாதுகாத்து புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.