Daily Horoscope
✕

மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் உணவுகள் என்ன...?

Written By Sasikala
Published: வெள்ளி, 4 ஜூன் 2021 (16:40 IST)

பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை  அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளைசெல்களை நன்கு செயல்பட வைக்கிறது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு  இந்த உணவு நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.
 
மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும். நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி  அறிவுத்திறனை அதிகரிக்கும்.
 
பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும்  ஆரோக்கியத்துடன் இருக்கும்.
 
நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.
 
தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர்  குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.

எல்லாம் காட்டு

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments