Daily Horoscope
✕

குடைமிளகாயில் நிறைந்துள்ள சத்துக்கள் என்ன...?

Written By Sasikala
Updated: வெள்ளி, 5 நவம்பர் 2021 (10:38 IST)

குடைமிளகாயில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகமுள்ளது. மேலும் வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது.
 
குடைமிளகாயை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான பிரச்சனைகளை விரைவாகத் தடுக்கலாம். குடைமிளகாயை உணவில் சேர்த்தால் விரைவில் ஜீரணம் ஆகிவிடும். எனவே, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.
 
குடை மிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே உடல் எடையைக்  குறைக்க விரும்புபவர்கள் குடை மிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.
 
குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது.
 
குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி" சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
 
நீரிழிவு நோயில் இருந்து விடுபட குடைமிளகாய் ஒரு நல்ல மருந்து. அதிலும் சர்க்கரை நோய் இருப்போர் இதனை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் உடலில் சர்க்கரை அளவுக் குறையும்.

எல்லாம் காட்டு

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

அடுத்த கட்டுரையில்
Show comments