வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் என்ன...?
வெள்ளரிகாயில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது.
நீர்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டால் தோல் ஆரோக்கியமாக இருக்கும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமையான தோற்றத்தை கொடுக்கும்.
வெள்ளரிக்காய் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கும். வெள்ளரி துண்டை கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்தால் கண்கள் குளிர்ச்சியடையும்.
வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்.
வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சீராக நடப்பதற்கு உதவுகிறது. தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதில் இருக்கும் சத்துகள் அடிக்கடி பசியெடுக்கும் உணர்வை கட்டுப்படுத்தி நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.