1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 23 மே 2022 (17:18 IST)

மலச்சிக்கல் பிரச்சனை உருவாவதற்கான முக்கிய காரணங்கள் என்ன...?

Constipation
நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படும். நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.


பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிக புரத உள்ளடக்கம் இருப்பதால் சில சமயங்களில் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

எண்ணெய் மற்றும் துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது படிப்படியாக மலச்சிக்கல் அபாயத்தை அதிகரிக்கும்.

நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, அதிக காரமான உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை உருவாகும்.

தொடர்ந்து மது அருந்துவது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். இது மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை மோசமாக்கும்.

அதிக கொழுப்பு நிறைந்துள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ் கலோரிகளை மட்டும் அதிகரிப்பதில்லை. அதனுடன் சேர்த்து செரிமான நேரத்தையும் அதிகமாக்கும்.

வலிநிவாரணி மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகள் அடிக்கடி எடுத்துக்கொள்ளும்போது அவை செரிமான பாதையை அடைத்து கொண்டு, கழிவுகள் அனைத்தும் வெளியேறுவதை நிறுத்திவிடும். இந்த காரணமாக மலச்சிக்கல் பிரச்சனை உருவாகும்.