புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதால் என்ன நன்மைகள்...?

சித்த மருத்துவத்தில் அத்திபழம் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்திபழம் மட்டுமல்லாமல் அத்திக்காய்,அத்திப் பூ, அத்தி இலை, அத்தி வேர், அத்திப் பட்டை, அத்திப்  பால் அனைத்துமே மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

அத்திபழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. இரத்த விருத்தியை  அதிகபடுத்துகிறது. பித்ததினை சரி செய்ய அத்திபழம் பெரிதும் பயன்படுகிறது.
 
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும்  நீக்குகிறது. 
 
அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
 
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
 
நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக  வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.