வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பேரிக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும். இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகின்றன. எலும்புகள் மற்றும் பற்கள் பலவீனமாக உள்ளவர்கள் பேரிக்காய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
 
கர்ப்பிணி பெண்கள் அன்றாட உணவில் பேரிக்காய் சேர்த்து உண்டு வந்தால், பிறக்கும் குழந்தை வலுவாக பிறக்கும். தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கும் பால்  சுரக்க உதவுகிறது.
 
பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை மற்றும் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.