வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 12 மே 2022 (17:42 IST)

முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் என்ன நன்மைகள்...?

முடக்கறுத்தான் கீரை. இது உடலில் ஏற்படும் வாதக்கோளாறுகளை சரி செய்கிறது. அதனால் தான் இதை முடக்கத்தான் என்கிறோம். இதில் வைட்டமின்களும், தாதுப்புகளும் அதிகளவு உள்ளது.


மூட்டுகளில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு போன்றவை தான் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது. இதனை கரைத்து சிறுநீரக வெளியேற்றினால் மூட்டுகளில் வலி குறையும். மூட்டுகளில் வலியை குறைக்க முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

முடக்கத்தான் இலையை நிழலில் காய வைத்து பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரிலோ அல்லது தேனிலோ அரை டீஸ்பூன் இதை கலந்து குழைத்து, தொடர்ந்து ஒரு மண்டலம் அளவு இதை சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் வலி குறையும்.

மூட்டுகளில் அதிகளவில் தங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து சிறுநீராக வெளியேற்றும். மூட்டுகளுக்கு நடுவில் உருவாகும் ஜெல்லின் உற்பத்தியை அதிகரித்து எலும்புகளை வலிமையாக்கும்.

முடக்கத்தான் கீரையை மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக செய்து சாப்பிட்டால் சிறிதும் கசப்பு தெரியாது. மாத்திரைகளால் மூட்டுவலியின் வீரியம் தற்காலிகமாக குறையும்.

முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் வலியை நிரந்தரமாக குறைக்கலாம். ​மூட்டு வலி, எலும்பு தேய்மானம் இருப்பவர்கள் வாரத்துக்கு மூன்று முறை முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து கொண்டால் மூட்டுவலி படிப்படியாக குறையும்.