ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 12 மே 2022 (11:23 IST)

சிறந்த மருத்துவ குணமிக்க காய்கறிகளில் ஒன்று கோவைக்காய் !!

நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை அளவை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க கோவைக்காய் மிகவும் பயன்படுகிறது.


கோவைக்காயில், சாம்பார், கூட்டு,அவியல்,பொரியல்,ஊறுகாய்,வத்தல் போன்றவை செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண், வாய்ப்புண், உதடு வெடிப்பு ஆகியன குணமாகும்.

கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்.

கல்லீரலுக்கு பலம் கொடுத்து கல்லீரல் பழுதடையாமல் பாதுகாக்க கோவைக்காய் மிக சிறந்த மருத்துவ குணம் மிகுந்த உணவாகும். கோவை இலையின் சாற்றை பூசும்போது வியர்குரு விலகும்,

பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடிப்பதன் மூலம் வாய்ப்புண் விரைவில் குணமடையும்
.
சுவையின்மை தீர கோவைக்காயை நறுக்கி காய வைத்து, வற்றலாக்கி வைத்துக் கொண்டு நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். அல்லது கோவைக்காயை ஊறுகாய் செய்தும் சாப்பிட்டு வரலாம்.

மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.