Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவை தடுக்கும் வழிமுறைகள் !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (15:15 IST)

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை சீரான  முறையில் பின்பற்றி வந்தால் தொல்லை இருக்காது.
 
மஞ்சளில் கர்குமின் என்ற பொருள் உள்ளது. இது ஈறு வலி, வீக்கம் மற்றும் எரிச்சலை சிறப்பான முறையில் குறைக்கும். மஞ்சளை வைட்டமின் ஈ எண்ணெய்யுடன் கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் ஈறுகளின் மீது தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வாயை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும்.
 
பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீருடன் கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். அதனை உங்கள் ஈறுகளின் மீது தடவி, 2 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதனை வாரத்திற்கு 2-3 முறையாவது பயன்படுத்துங்கள். இதனால் பேக்கிங் சோடா வாயில் உள்ள அமிலத்தை செயலிழக்க செய்யும். மேலும் பல் பிரச்சனைகள் மற்றும் ஈறு நோய்கள் ஏற்படும் இடர்பாடுகள் குறையும்.
 
ஈறு அழற்சிக்கான வீட்டு சிகிச்சை என்றால் அதில் கண்டிப்பாக எலுமிச்சையும் அடங்கியிருக்கும். இதில் வைட்டமின் சி இருப்பதால் தொற்றுகளில் இருந்து அது  உங்களை பாதுகாக்கும். எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து, பல் துலக்கிய பின், அதைக் கொண்டு வாயை கழுவுங்கள். ஈறுகளில் இரத்த கசிவு மற்றும் வலி ஆகிய பிரச்சனைகள் முன்பை காட்டிலும் குறையத் தொடங்கி விடும்.
 
கற்றாழையை சாறு எடுத்து, அதனை நேரடியாக தடவுங்கள். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

எல்லாம் காட்டு

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

30 வயதுக்கு மேல் சாப்பிட வேண்டிய உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments