Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் வால்நட் எண்ணெய் !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (14:28 IST)
பல்வேறு நன்மைகளை தரும் வால்நட், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு அதிக அளவில் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.


வால்நட் எண்ணெய்யை தினமும் முகத்தில் தடவி, கீழிருந்து மேல் நோக்கியவாறு வட்டவடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் எண்ணெய் ஊடுருவி, சுருக்கங்களை நீக்கி, இளமை தோற்றத்தை மீட்டுத்தரும்.

வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வால்நட் எண்ணெயை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும். மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும்.

தினமும் வால்நட்டை சாப்பிடுவதால், புற்றுநோய் பாதிப்பு 15 சதவீதம் குறைவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றலும் வால்நட் எண்ணெய்க்கு உள்ளது.

பெண்கள் பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது, கண்களுக்குக் கீழே உருவாகும் கருவளையம்தான். இதற்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாகும். இதை கண்களைச் சுற்றித் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால், சில நாட்களிலேயே கருவளையம் மறையும். இதில், உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தின் இளமையை தக்கவைக்கும் தன்மை கொண்டவை.

குளிப்பதற்கு முன்பு வால்நட் எண்ணெய்யை இளம் சூட்டில் உடலில் தடவிக் குளித்தால், பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் அரிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் குறையும். வால்நட் எண்ணெய்யை தலைப்பகுதியில் உள்ள சருமத்தில் நன்றாகத் தடவி மசாஜ் செய்து, அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவந்தால் பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments