வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (13:20 IST)

ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுவதன் மூலம் சருமத்தை அழகாக்க முடியுமா...?

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும்.


ஆரஞ்சு பழத்தினை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது. தினமும் ஆரஞ்சு பழத்தினை ஜுஸ் போட்டுக் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம். குறிப்பாக சிறுநீரக கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

கரையக் கூடிய நார்ச்சத்தானது ஆரஞ்சு பழத்தில் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கிறது. ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதய பிரச்சணைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்துகிறது. ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் செரிமான பிரச்சனை ஏற்படாது.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிடக்கூடாது. ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படலாம்.

ஆரஞ்சு ஜுஸை தினமும் குடிப்பதன் மூலம் மூட்டுவலி குணமாகும். தினமும் ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுவதன் மூலம் நமது சருமம் அழகாகவும், இளமையாகவும் இருக்கும்.