1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (09:53 IST)

அரிசி கழுவிய நீரில் உள்ள வைட்டமின்களும் அதன் அற்புத நன்மைகளும் !!

அரிசி தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும். அதற்கு காட்டனை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.


சருமத்தின் மேல் பகுதியை நீர்த்தன்மை பெற வைத்து, சரும அணுக்களை புத்துணர்ச்சி பெற வைத்து அதை ஆரோக்கியமாக, நீர்த்தன்மை மிக்கதாக, மென்மையானதாக ஆக்குகிறது.

முகத்தை சுத்தமாக்க, இயற்கையான பேஸ் கிளின்ஸர் தேவை எனில் அரிசி நீர் கைகொடுக்கும். சருமத்தின் மீது கிளின்சராக செயல்பட்டு தூசுகளை அகற்றி, துளைகளை சுத்தமாக்குகிறது. பஞ்சில் அரிசி நீர் நனைத்து முகத்தை அதை கொண்டு துடைத்துக்கொள்ள வேண்டியது தான்.

அரிசி கழுவிய நீரில் வைட்டமின் ஏ, சி, டி, ஈ நிறைந்துள்ளது. அரிசியை நீரில் ஊறவைக்கும் போது இதிலிருக்கும் ஸ்டார்ச் ஆனது கூந்தலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.

குளிக்கும்போது சிறிது அரிசி நீரை உங்கள் குளியலில் சேர்க்கலாம். இது அன்றைய மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.

அரிசி கழுவிய நீர் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, அதனைக் குடித்தால், உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்டுகளும், மற்ற ஊட்டச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.