வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (16:46 IST)

நெல்லிக்காய் சாறு அடிக்கடி குடித்து வருவதால் என்ன நன்மைகள்...?

உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் விட்டமின் சி சத்து நெல்லிக்கனியில் அதிகமாக உள்ளது. இந்த விட்டமின் சி சத்து உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றும்.


நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள் உடலில் வயது மூப்பு அதாவது வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. இது முதுமையை தள்ளிப்போடும் கனி என்று கூறுகிறார்கள் மற்றும் இதை ஏழைகளின் ஆப்பிள் மற்றும் ராஜகனி என்றும் கூறுவார்கள்.

நெல்லிக்காய் சாரை அடிக்கடி குடித்துவர கண் குறைபாடுகள் நீங்கி கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். தினமும் நெல்லிக்காய் சாறுடன் சிறிது தேன் கலந்து இரண்டு வேளை குடித்து வர ஆஸ்துமா நோய் குணமாகும்

நம் உடலில் கல்லீரல் என்பது நாம் உண்ணும் உணவில் அல்லது வேறு வடிவிலோ ரத்தத்தில் நச்சுக் கிருமிகள் சேரும்போது அதை நீக்கும் உறுப்பு கல்லீரல். கல்லீரலில் ஏற்படும் நோய் மஞ்சள் காமாலை. இந்த மஞ்சள் காமாலைக்கு நெல்லிக்காய் சாறு அடிக்கடி குடித்து வர இந்த நோய் வராமல் நாம் கல்லீரலை பாதுகாக்கலாம்.

சிறுநீரக கற்களை கரைக்கும் வல்லமை கொண்டது நெல்லிக்காய் சாறு. இதனுடைய சுவை இனிப்பு துவர்ப்பு கசப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்தது பெரும்பாலும் கசப்பு துவர்ப்பு உள்ள காய்கள் பல நோய்களை குணப்படுத்துவதாக கூறுங்கள் குறிப்பிடுவதால் இந்த கணி உடல்நலத்திற்கு முக்கியமாக கருதப்படுகிறது.