ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (12:33 IST)

துளசியை வழிபடுவதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!

அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால் சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர்.


அப்போது பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அக்கலசத்தின்றும் பச்சை நிறத்துடன் ஸ்ரீ துளசி மகாதேவி தோன்றினாள்.

துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார். துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர். இலையின் நுனியில் பிரம்மன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரஸ்வதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர்.

துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை வழிபட்டால் ஆயுள் பலம், புகழ், செல்வம், மகட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர்.