Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகுந்த மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகை சிவக்கரந்தை !!

Written By Sasikala
Updated: புதன், 5 ஆகஸ்ட் 2020 (10:20 IST)

இந்த மூலிகை செடியை பூக்கும் முன்பே கொண்டுவந்து மண்ணில்லாமல் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி வேரோடு எல்லா பாகங்களையும் இடித்து சூரணம் செய்து ஒரு புதிய மட்கலயத்தில் இட்டு கலாயவாயை கட்டி வைத்து கொள்ள வேண்டும்.
 
மருத்துவ பயன்கள்:
 
சிவக்கரந்தை மூலிகை செடி இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்குகிறது. சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்கள் போகும். கபத்தை கரைக்கும்.நாற்பது நாட்கள் உட்கொண்டால் மேனி அழகு கூடும்.
 
சிவக்கரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது. சிவகரந்தையின் வேர் கஷாயம் மூலநோயை  குணப்படுத்தும்.சிவக்கரந்தை போடி மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.
 
சிவக்கரந்தை பொடி சிறுநீரக நோய்களை போக்க வல்லது. மேலும் இது உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை போக்கும். சிவகரந்தை பொடி நல்ல பசியை  தூண்டக்கூடிய ஒரு சிறந்த மூலிகை. அத்துடன் இது இரத்தத்தில் உள்ள மாசுக்களை நீக்கும்.

எல்லாம் காட்டு

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments