வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பலவிதமான நோய்களை குணப்படுத்தும் மருதம் பட்டை !!

சில மரத்தின் பட்டைகள் கூட மருத்துவ குணங்கள் நிறைந்ததாக உள்ளது. அதில் ஒன்று தான் நாம் இப்பொழுது பார்க்க போகும் மருதம் பட்டை. இந்த மருதம் பட்டையை நாம் உபயோகப்படுத்தினால் எந்தெந்த நோய்களிலிருந்து விடுபடலாம் என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சில பெண்களுக்கு மாதவிலக்கு சரியான தேதிகளில் வருவதில்லை . அப்படிப்பட்டவர்கள் மருதம் இலைகளை காய வைத்து சூரணமாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வர மாதவிலக்கு சுழற்சி முறை, சீரடையும்.
 
வாய் புண், தொண்டை வலி போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடியை கலந்து தண்ணீரில் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, அந்த  நீரை வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி, வாய்ப்புண் குணமாகும். மேலும் நன்கு உலர்ந்த மருதம்பட்டையை நன்கு பொடித்து  அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா பிரச்சனைகள் குணமாகும்.
 
இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்புக்கு காரணம். இரத்தக் குழாயில் கொழுப்பு சேராமல், அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் சக்தி மருதம்பட்டைப் பொடிக்கு உள்ளது.
 
இதயம் சார்ந்த நோய்களுக்கு மருதம் பட்டை, வெண் தாமரைப் பூ 100 கிராம், ஏலக்காய், இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து பொடியாக்கி  காலை மற்றும் மாலை வேளைகளில் 5 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர, இதய நோய் விரைவில் குணமடையும்.
 
பயம், கோபம், தூக்கமின்மை போன்ற பிரச்சனை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதம் பட்டை, வில்வம், துளசி சம அளவில் எடுத்து சூரணம் செய்து, காலை மற்றும் மாலை நேரத்தில் சாப்பிட்டு வர இந்த பிரச்னைகள் விலகும்.