Daily Horoscope
✕

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட மஞ்சள் !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (13:18 IST)

Turmeric
மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும். மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு  கட்டுப்படும்.
 
மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும். தினம் அரை  கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.
 
மஞ்சளை இலுப்பெண்ணெய்யில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும். மஞ்சளை வேப்ப எண்ணெய்யில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்.
 
மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும். மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெய்யில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.
 
மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும். அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும். அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.

எல்லாம் காட்டு

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments