வியாழன், 2 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (18:46 IST)

பல்வேறு நோய்களுக்கு தீர்வு தரும் திரிபலா சூரணம் !!

திரிபலா சூரணத்தில் நிறைய ஆன்டி ஆசிட் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியே அதிகரிக்கிறது. முதுமையை தள்ளி போட உதவுகிறது.


இதய நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் வராமல் தடுக்கிறது மற்றும் இதயத்தை பராமரிக்கிறது. புற்று நோய் வராமல் தடுக்கிறது.

மனிதனின் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும் உதவுகிறது. சுகர் உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுகர் அளவு சீராக இருக்கும்.

இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது மற்றும் அஜீரண கோளாறுகளையும் சரி செய்கிறது. இது குடற்புழுக்கள் வராமல் தடுக்கும்.

நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து புதிய ரத்தம் வர இந்த மருந்து அற்புதமாக செயல்படும் என்றே சொல்லலாம். தோல் நோய், சுவாசப் பிரச்சனை, மூச்சிக் குழாயில் சளி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த திரிபலா சூரணம் சாப்பிட்டு வந்தால் சரி ஆகும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கல்லீரல் செயல்பாட்டை சீராக செயல்ப்படுத்தவும், பாதுகாக்கவும் திரிபலா சூரணம் உதவுகிறது.  திரிபலா சூரணம் உடல் எடை குறைக்க இது சிறந்த மருந்தாக அமைகிறது.

அல்சர் உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும். திரிபலா சூரணம் ஆண்மை அதிகரிக்க தினமும் இரவில் பானக்கற்கண்டுடன் திரிபலா சூரணம் பொடி சேர்த்து சாப்பிடவும். சாப்பிட்ட பின் பசும் பால் குடித்து வந்தால் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.