செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (17:47 IST)

அன்னாசி பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பலன்களும் !!

Pineapple
ரத்தச்சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னசிபழத்தின் சாறு ஒரு சிறந்த டானிக்காக செயல்படுகிறது. அன்னாசியில் மாங்கனீஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.


அன்னாசிபழத்தில் புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் அதிக அளவில் நிறைந்துள்ளது. வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.

ஒற்றைத் தலைவலி என்று சொல்லக்கூடிய ஒருபக்க தலைவலியைக் குணப்படுத்த அன்னாசிப்பழத்துடன் தேன் சேர்த்து 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும்.

அன்னாசி பழத்தில் அதிக அளவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. அன்னாசி பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றது. மேலும் உங்களின் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.

அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. மேலும் உங்கள் இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

உயர் இரத்த அழுத்தத்தினை குறைப்பதற்கு அன்னாசிபழம் பெரிதும் பயன்படுகிறது. அன்னாசிபழதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருக்க பயன்படுகிறது.

அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் எ உங்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க அன்னாசிபழம் பயன்படுகிறது.