ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!

தினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயில் ஏற்படாமல் தடுக்கலாம். இதில் உள்ள ‘ஒலெகெந்தஸ்’ எனும் ஊட்டச்சத்து நம்முடைய  உடலில் உள்ள திசுக்களின் அழற்சியை தடுக்கிறது. 

இதில் எண்ணற்ற வைட்டமின்களும் ஆன்டி-ஆக்சிடென்ட்களும் உள்ளது. எனவே பெண்களை அதிகமாக தாக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும்  தோல் புற்றுநோய், உடல்குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படாமலும் பாதுகாக்கும்.
 
ஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் சேர்த்து கொள்ள நம் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் நம்மை மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும்.
 
எலுமிச்சை சாறுடன் இந்த ஆலிவ் ஆயிலை கலந்து உபயோகித்தால் கல்லீரலில் ஆக்சிஜனேற்ற பாதிப்பு பிரச்சனை நீங்கும். மேலும் நம்முடைய கல்லீரலையும்  வலுவாக்கும். தினமும் இந்த ஆலிவ் ஆயிலை பயன்படுத்தினால் ஆக்சிஜனேற்ற தடுப்பாக செயல்பட்டு நம்முடைய கல்லீரலை பாதுகாக்கும். மேலும் இது கல்லீரல்  சுத்திகரிப்பனாகவும் செயல்படும்.
 
ஆலிவ் ஆயில் ஒரு மிகச்சிறந்த ஆண்டி ஆக்ஸிடண்ட்டாக செயல்படுகின்றது. நேயை எதிர்த்து போராடும் சக்தி ஆலிவ் ஆயிலிற்கு இயற்கையாகவே உள்ளது.  இதனால் நோயை உண்டாக்கும் கிருமிகளை ஆரம்பத்திலேயே எதர்த்து போராடி அழிக்கும்.
 
தினமும் ஆலிவ் ஆயில் எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறையும். ஆலிவ் ஆயிலை சுடு தண்ணீரில் கலந்து சிறிது எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை  பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.
 
இயற்கையாகவே ஆலிவ் ஆயிலிற்கு செரிமானத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. செரிமான மண்டலத்தை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் திறன் ஆலிவ்  ஆயிலிற்கு உள்ளது. இதனால் செரிமானப் பிரச்சணை இருப்பவர்கள் ஆலிவ் ஆயிலை தொடர்ந்து உபயோகிக்கலாம்.
 
ஆலிவ் ஆயிலை உபயோகித்தால் நம்முடைய எலும்புகளுக்கு சக்தியை தரும் கால்சியத்தின் அளவை அதிகரிக்கும். இதில் உள்ள ‘ஒலெயூரோபின்’ சத்துக்கு  நம்முடைய எலும்பை வலுவாக்கும் சக்தி உள்ளது.