செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பிரண்டையை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!

பிரண்டையின் சாறு உடலில் பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப்  பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.
பிரண்டையை துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். ஞாபக சக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும். எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். 
 
இதனை வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் வனப்பும் பெறும். மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள்  இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும்.
எலும்பு முறிவு மட்டும் அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும். பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.
 
பிரண்டையை துவையலை ரத்த ஓட்டம் சீராகும். இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி  போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்தாக உள்ளது.