Daily Horoscope
✕

மருத்துவ குணங்கள் நிறைந்த ஆலிவ் ஆயில் எதற்கெல்லாம் பயன்படுகிறது....?

Updated: புதன், 21 நவம்பர் 2018 (11:50 IST)
உடலில் உள்ள கெட்ட கொழுப்பான லோ டென்சிடி லைபோபுரோடீன் அளவை கார்டியா ரீஃபைன்ட் எண்ணை குறைக்கிறது. HDL என்னும் நன்மை செய்யும் கொழுப்பின் விகிதம் உடலில் அதிகரிக்கிறது. 
 
ரத்த நாளங்களில் கொழுப்புப் படலம் படியாது. இதனால் இதயத்தின் தசைகளின் அழுத்தம் குறையும். சிரமப்பட்டு ரத்தத்தை இதயம் பம்ப் செய்யவேண்டி இருக்காது. ரத்தத்தின் அழுத்தமும் அதிகரிக்காமல் சீராக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள்  தடுக்கப்படுகின்றன. மாரடைப்புக்கான சாத்தியங்களும் குறையும்.
வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றை உட்கிரகிக்க இந்த எண்ணெய் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடென்டுகள்  புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை வெகுவாகக் குறைக்கின்றன.
 
சூரியனில் இருந்து வரும் தீமை விளைவிக்கும் கதிர்கள் தோலைக் கருப்பாகவும் தடிமனாகவும் மாற்றும். ஆனால் இந்த ஆலிவ் எண்ணெய் தீமை செய்யும் கதிர்களின் பாதிப்பில் இருந்து தோலைக் காக்கிறது. கருமை நிறம் படிப்படியாகக் குறைந்து தோல் இயல்பு நிறத்துக்குத்  திரும்பும். தோல் மென்மையாகவும் இளமையாகவும் தோற்றம் அளிக்கும்.
 
நம் உடம்பில் தினம் புது செல்கள் உருவாகி பழைய செல்கள் உதிருகின்றன. சிறிது சர்க்கரையும் ஆலிவ் ஆயிலும் கலந்து முகத்தில் தேய்த்தால் மிகுதியான இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளபளப்பாகும். உடலின் மற்ற பகுதியில் ஆலிவ் ஆயிலும் கடல் உப்பும் கலந்து  தேய்க்கலாம்.
 
கூந்தலுக்கு ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் கூந்தல் வலுவானதாகவும், அடர்த்தியாவதுடன் கூந்தல் செழுமையாகவும் காட்சி தரும். ஆலிவ் ஆயில் உங்கள் கூந்தலுக்கு டீப் கண்டிஷனராகவும், பொடுகுத் தொல்லை தீரவும் உதவும்.

எல்லாம் காட்டு

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments