பதநீரை காய்ச்சி அதிலிருந்துபெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் வைக்கும். பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யும் ஆற்றல் கொண்டது கருப்பட்டி. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து...