வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்....!!

வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் கொண்டது. வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற ஊளைசதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலுமாக குறைகின்றது. 
வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையும் நார்ச்சத்தானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரழிவு நோயை  கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
 
வெந்தயத்திலுள்ள சயோனின் என்ற வேதிப்பொருள் ஆண் ஹார்மோன் உற்பத்தியில் பெரும் பங்கு வகித்து ஆண்கள் பிரச்சனைகளை போக்குகிறது. ஸ்டார்ச் இல்லாத பாலிசாக்கரைடு வகை நார்ச்சத்து வெந்தயத்தில் இருப்பதால் குடலில் உள்ள உணவு செரித்தலுக்கு  துணைபுரிகிறது.
 
தொடர்ந்து காலையில் வெந்தயம் சாப்பிட்டு வருவதால் நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றது. 
 
வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் ஒவ்வாமை குணமாக்குகின்றது.
 
தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பலங்கள் ஆகியவற்றை வெந்தயம் முற்றிலுமாக நீக்குகின்றது. இருமல் மற்றும்  தொண்டை கரகரப்பிலிருந்து நல்ல நிவாரணம் தருகின்றது.
 
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும். ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.